தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகளை விடத் தயார்!

249 0

வடக்குக் கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 33 ஆயிரத்து 584 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளதென குறிப்பிட்ட அவர், மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த விசாரணைகள் நடைபெறுவதற்கு சிலவேளைகளில் வருடக் கணக்கில்கூட செல்லலாம். இதற்கு காலக்கெடு எதனையும் வழங்கமுடியாது.

எவ்வாறிருப்பினும், காணாமல்போனோர் விடயத்தில் வினைத்திறன்மிக்க தீர்வுகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதனடிப்படையிலேயே காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.