திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவரை காணவில்லை

358 0

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார்.மூதூர் , ஹபீப் நகரைச் சேர்ந்த 22 வயதான வஹாப்தீன் பஹீர் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை மீன் பிடிக்கச் சென்றுள்ள அவர் மாலை வரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் இன்று காலை இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த நபரைத் தேடும் பணிகள் இன்று தொடங்குமென தெரிவிக்கப்படுகின்றது.