வனாத்தமுல்ல பிரதேசத்தின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு ரொஷான் எனப்படும் சாமர சந்தருவன் என்பரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 05ம் திகதி வனாத்தமுல்ல மைதானத்திற்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர்கள் தொடர்பில் அடையாளம் காணப்படாதிருந்தது.
இந்நிலையில் சந்தேகநபர்கள் மூன்று பேரும் நேற்று பிற்பகல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

