திருகோணமலை – மூதூர் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று காலை இவர் இவ்வாறு கடலுக்குச் சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தில் காணாமல் போனவர் மூதூர் – ஹதீப் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராகும்.
இவரைத் தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினருடன் மக்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

