கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

558 0

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் யாழ். கச்சேரியில் நேற்று யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான தங்குமிட, மலசலகூட, உணவு, நீர், போக்குவரத்து வசதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன், நெடுந்தீவு மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பாதிரியார் ஜெயரஞ்சன், நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் அத்துடன் கடற்படைனர், இராணுவ படையினர், ஊர்காவத்துறை பொலிஸ், சுங்கவரித்துறையினர், இலங்கை செஞ்சுலுவை சங்கம், வேலணை பிரதேச செயலாளர், வேலணை படகு ஓட்டிகள், சுகாதார அதிகாரிகள், தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.