ஆப்கானில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன: ஐநா அமைப்பு தகவல்

478 0

கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பதிவான பொதுமக்களின் இறப்புக்கள் இது வரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தைகள் இறப்பு அல்லது காயமடைந்த சம்பவங்கள் கடந்த ஆண்டில் இது வரை இருந்ததிலேயே மிக அதிகமாக உள்ளன.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஆப்கான் குடிமக்களின் மரணங்கள் தொடர்பாக ஆவணப்படுத்தும் பணியை தொடங்கிய ஐக்கிய நாடுகள் அவையின் உதவிப் பணி குழு, கிட்டத்தட்ட 11, 500 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் பலர் மரணமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பிரதான தீவிரவாத குழுவாக தாலிபான் அமைப்பு இன்னும் இருந்து வந்தாலும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதல்களில் குடிமக்களின் உயிரிழப்பு பத்து மடங்கு அதிகரித்துள்ளது.