முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரால் 20 ரூபா குற்றிநாணயம் வெளியீடு

190 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி இருபது ரூபா குற்றிநாணயம் மாவட்ட அரசாங்க அதிபரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 1871 ஆம் ஆண்டு ஆசியாவில் முதன் முதலாக விஞ்ஞான ரீதியிலான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு முறை ஆரம்பிக்கப்பட்டது.

இதன் 150 ஆவது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் வகையில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இலட்சனையுடன் அரசாங்கம் 20 ரூபாய் நினைவு குற்றிநாணயத்தை  வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட குற்றிநாணயத்தை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனால் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந்த வெளியீட்டு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம் ) க. கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்னம், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இராஜசூரி, மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.