அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படாது – அமரவீர

244 0

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஆளும் அரசாங்கத்தில் பிளவு ஏற்படுவதாகவும், விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படாது.

சிலர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என வெளிப்படையாகவே கோரிவருகின்றனர்.

எனினும் அது அவசியமற்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.