அரசாங்கத்தின் காதில் மக்களின் பிரச்சினை விழுவதில்லை-மஹிந்த ராஜபக்ஷ

467 0

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டம், பணிப் பகிஷ்கரிப்பு என்பன நாளுக்கு நாள் இரண்டிரண்டாக அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அதிகரித்துள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பன குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டில் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. நாட்டு பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை.

நான் ஆரம்பித்த கொழும்பு – கண்டி அதிவேக பாதைக்கு அருகில் மீண்டும் அடிக்கல் நாட்டி அபிவிருத்திப் பணியை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எனக்கு ஏசிக் கொண்டே இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் கூறியுள்ளார்.