பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தில் ……….

343 0

பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கைக்கான நட்புறவு விஜயமாக இந்த கப்பல் இங்கு வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடைந்தவுடன் திருகோணமலை கடற்படையினர் வரவேற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்பவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.