அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு

365 0

அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற அவன்ற் கார்ட் கப்பலின் தளபதி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் சந்தேகநபர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபருக்கு தற்போது கண் பார்வை குறைவடைந்து வருவதாகவும் எனவே விசேட வைத்திய நிபுணரிடம் அவருக்கு சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

சட்டத்தரணியின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், சந்தேகநபருக்குத் தேவையான சிகிச்சைகளை உரிய வைத்தியசாலையில் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலி சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கடற்படையினரால் அவன்ற் கார்ட் கப்பல் கைப்பற்றப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி குறித்த கப்பலின் தளபதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.