70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்பது சந்தேகம்- மஹிந்த ராஜபக்ஸ

317 0

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சுதந்திர தினத்தின் அர்தத்தை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், 2017 பெப்ரவரி 04ம் திகதி, இலங்கையர்களான நாங்கள் அடிபணிந்து இருந்த நிர்வாகத்தில் இருந்து சுதந்திரமடைந்து 69ஆவது ஆண்டை கொண்டாடவுள்ளோம்.

இளைய தலைமுறையினருக்கு நம்முடைய சுதந்திரத்தினதும் இறையாண்மையினதும் முக்கியத்துவத்தின் அர்தத்தை எடுத்துக் கூறுவதை விட, எமது அரசியல் தலைவர்களுக்கு நம்முடைய சுதந்திரத்தினதும் இறையாண்மையினதும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதே இன்று முக்கியமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் தலைவர்கள் நாட்டை துண்டாக்கி, பொலிஸ் சேவையுடனான தனியான பிராந்தித்தை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், இந்த சுதந்திர தினத்தில், எமது இளைஞர் சமுதாயத்தை விட எமது நிர்வாகிகளிடம் சுதந்திரத்தின், இறையாண்மையின், விடுதலையின் முக்கியத்துவத்தை காண வேண்டும் என்று பிரார்த்திப்பதாக மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.