எதிர்வரும் காலங்களில் கடற்தொழில்துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் – கடற்றொழில்துறை அமைச்சர் எச்சரிக்கை

317 0

அருகிவரும் மீனினங்களை பெருக்கமடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாமை காரணமாக எதிர்வரும் காலங்களில் கடற்தொழில் துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடற்தொழில் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கடலில் உள்ள மீன்களை பிடிப்பதற்கு உலகில் உள்ள சகல தொழிநுட்ப முறையிலான உபகரணங்களும் பயன்படுத்தப் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.