அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது-கூட்டு எதிர்க்கட்சி

317 0

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள தனியார் காணி ஒன்றை வரிச்சலுகையின் கீழ் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொம்பனித் தெருவில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை ஊழலான நாடுகள் தரவரிசையில் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.