அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை-சந்திம வீரக்கொடி

249 0

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் முன்வைக்கும் சில யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தாலும் அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் மக்களுக்கு ஏதேனுமொரு செயற்பாடு நடந்தால், அதனை நிறுத்த வேண்டிய பொறுப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

எந்த வகையிலாவது இலங்கையில் சர்வாதிகாரமிக்க தலைவர் ஒருவர் இருந்திருப்பாரேயானால் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணைகள் நடக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற, ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம், பாலியல் தொழில் போன்றவற்றை சட்டமாக்கும் யோசனைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டன.

இவற்றை நிறுத்த வேண்டும் என்று கௌரவ ஜனாதிபதி அந்த யோசனைகளுக்கு இணங்க முடியாது என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்.

அதேவேளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தரம் குறைந்த எரிபொருள் தொகை சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையின் தரத்திற்கு பொருத்தமில்லை என்றால், அந்த கப்பல் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சருமான சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.