நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் -ரணில்

238 0

பணிப்பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடாத்தி  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

நாம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ள நாட்டையே கையேற்றோம். 2015 இல் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க தீர்மானித்தோம். பொருளாதாரத்தை சரிசெய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி வரும் போது அடிப்படை வாதிகள் பிரச்சினைப்படுத்துகின்றனர். இந்த அடிப்படைவாதிகளுக்கு தலை தூக்க முடியாதவிதத்தில் எமது வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.

எமது பயணத்தை தவிடுபொடியாக்க இடமளிக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நாம் விடுமுறையொன்றை எடுத்தோம். தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்க நடவடிக்கை எடுப்பொம் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.