ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது- மைத்திரிபால சிறிசேன

248 0

நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்க திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயனுள்ள தேச வரைறைகளின் முகாமைத்துவத்திற்கான தரவுப் பகுப்பாய்வு என்ற தொனிப்பொருளில் சர்வதேச சுங்க தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை சுங்க திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் பற்றிய விழிப்புணர்வு கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இவ்விழிப்புணர்வானது ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புக்காக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு சுங்கத் திணைக்களத்தால் வழங்கப்படும் ஒத்துழைப்பை  பாராட்டிய ஜனாதிபதி, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளின்போது சுங்க திணைக்களம் மேற்கொள்ளும் பணிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு சுங்கத் திணைக்களம் தனது பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

சர்வதேச சுங்க நிறுவனத்தின் தகைமை சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை, விசேட நினைவுச் சின்னமொன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதுசுங்க வரி பெயர்ப்பட்டியல் இறுவட்டு, சுங்க கையேடு மற்றும் சுங்க சஞ்சிகை என்பனவும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.