முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளைஅடுத்த மாதம் 13 ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறுசிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டவழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிகநீதவான் அருனி ஆடிகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2010, 2011 மற்றும் 2013 ஆகிய மூன்று வருடங்களாக சொத்து தொடர்பான விபரங்களைசமர்ப்பிக்க தவறியமையினாலேயே துமிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குஒன்றை தாக்கல் செய்துள்ளது.
துமிந்த சில்வாவுக்கு கடும் சுகயீனம் காரணமாக அவர் இன்றைய தினம் நீதிமன்றில்முன்னிலையாகவில்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு தொடர்பில் துமிந்தசில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

