பலா மரத்தின் கிளை உடைந்து விழுந்து படுகாயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தார்.
பெல்மதுளை ஓப்பநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஓப்பநாயக்க தந்தெனிய வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதான சிறுமியே இவ்வாறு மரணமானார்.
சிறுமி நேற்று பகல் பாடசாலைவிட்டு தமது வீட்டுக்கு வந்து பகல் உணவை அருந்திவிட்டு வீட்டின் அருகில் உள்ள மரகறி தோட்டத்தின் அருகில் உள்ள வீதியில் விளையாடி கொண்டிருந்துவேளை வீதி ஒரத்தில் இருந்த பலா மரத்தின் கிளை ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.
சம்பத்தில் சிறுமி படுங்காயங்களுக்குள்ளான நிலையில் பெல்மதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் மேலதிக கிசிச்கைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

