உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில்!

339 0

மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன உறவுகள் தொடர்பில் வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

60 கைதிகள் இந்த உண்ணாவிர போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.