வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு தொழில் முன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
பயிற்சி இன்றி தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களே பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களுக்கு பயிற்சி வழங்கும் நிலையம் ஒன்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

