இதயத்தால் அழகான மனிதர் அன்னை தெரேசா மட்டுமே : நடராஜன்

261 0

nadarajanஅன்னைத் தெரேசா ஒரு நுட்பமான பிறவி, அவர் ஒர அரசியல் வாதியோ, விஞ்ஞானியோ, அல்ல மக்களுக்காக சேவை செய்வதற்காக பிறந்த ஒரு புனிதர் என இலங்கை. இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இந்திய தணைத்தூதரகத்தின் செய்தி வெளியீடு மற்றும், அன்னை தெரேசாவின் நினைவு நிகழ்வு நேற்று இடம்பெற்றது இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அன்னை தெரேசா உலக மக்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாவார், தனது வாழ்க்கை முழுவதும் நோய்களால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழ்ந்த மக்களுக்காகவே உழைத்தார்.

ஏழைகள், அடிமைகள்,கைவிடப்பட்டவர்கள் ,நோயாளிகள் என்போருக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.

உலக மக்களுக்கு உதவுவதை விடுத்து அவர் ஒரு கலைஞர், ஓவியர் சினிமா நட்சத்திரம் என பன்முக திறமையை தன்னகத்தே கொண்டவர்.

அன்னை தெரேசா, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா அல்லது ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்போரை விட மிகவும் அழகானவர் காரணம் மற்றவர்கள் தோற்றத்தால் அழகானவர்கள். ஆனால் அன்னைத்தெரேசா இதயத்தால் மிகவும் அழகானவர்.

இருப்பினும் அரை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1995இல் பீஜிங்கில் விஷேட மாநாடு இடம்பெற்ற போது அவர் வருகைத்தந்திருந்தார்.

அவருக்கான உணவு பறிமாறப்பபட்டபோது கூட அவர் அதனை ஏற்றுக்கொளளவில்லை தாமாகவே பறிமாறினார். விஷேட ஹோட்டல்களில் அரை வழங்கப்பட்ட போதும் கூட் அவர் அதனை நிராகரித்து விட்டார். செருப்பு அணியாமலே நடந்து வந்தமையானது அவரின் எளிமையை உணர்த்தியது.

அவரது பொதிகளை நான் சுமந்து வர கேட்டப்போதும் கூட அவர் அதனை மறுத்து விட்டார்.எனவும் தெரிவித்தார்.

மேலும் அன்னை தெரேசா தொடர்பான விஷேட சொற்பொழிவுகளும், அவர் மிசனரிகளுக்காக ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் விரிவுரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.