அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக மாற்றாது சில திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று முன்வைக்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக மாற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று 19வது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்ட போது உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அவசியமற்ற திருத்தங்கள் மாத்திரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

