மாவீரர் வார நிகழ்வுகள் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு.

97 0

தாயக மண் மீட்பு உரிமைப் போரில் தங்கள் இன்னுயிர்களை நீத்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள்  உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில்  தமிழ் இளையோர் அமைப்பினரால் (சுவிட்சர்லாந்து) பல்லின மக்களுடன் இணைந்து மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு பொது இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.  24.11.2021 இல் பேர்ன் மாநில தொடருந்து நிலையத்தருகிலும் 25.11.2021 சொலத்தூன் மாநில தொடருந்து நிலையத்தருகிலிருக்கும் பூங்காவிலும் முன்னெடுக்கப்பட்டது. கடுங்குளிரும் மழையுமான சீரற்ற காலநிலையிலும் மிக எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டது. பல்லின மக்கள் பலராலும் எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.