அனைத்து சமூகங்களும் சமவுரிமையுடன் வாழ்வதற்கான வேலைத்திட்டம்

329 0

1231912683Mangalaஅரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அனைத்து சமூகங்களும் சமவுரிமையுடன் வாழ்வதற்கான ஒரு வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அந்த நாட்டின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற சட்டவாட்சி, நீதி, நேர்மை மற்றும் நியாய மேலாண்மையை வலியுறுத்தும் விசேட சர்வதேச கருத்தரங்கிலும் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

நாட்டின் ஆட்புல இறைமையை பாதுகாத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு சமகால அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார்.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரித்தானியாவிற்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் நாளையுடன் நிறைவு பெறுகின்றமை கூறத்தக்கது.