துறைமுக விற்பனைக்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது

492 0

1084242826Coutஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதன் அண்டிய 15,000 ஏக்கர் நிலப்பரப்பை சீன முதலிட்டாளர்களுக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் கூறியிருந்தார். கூட்டு எதிர்க்கட்சி மற்றும் சோசலிஸ்ட் மக்கள் முன்னணி ஆகியன சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.