அக்கராயன் வீதியில் விபத்து இருவர் காயம் (காணொளி)

339 0

mullaiமுல்லைத்தீவு அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் முறிகண்டி-அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ரெயிலுடன், முறிகண்டியிலிருந்து அக்கராயன் நோக்கி பயணித்த கப் ரக வாகனம், பாதுகாப்பு சமிக்ஞையை மீறி கடக்க முற்பட்டபோது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.