இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

272 0

1531815372untitled-1இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இம்முறை குறித்த பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மீன்பிடி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, மீனவர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு குறித்து ஆராய இருநாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி, முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நிலையில், இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கொழும்பில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

மேலும் இந்தக் கலந்துரையாடலுக்காக இந்தியா சார்பில் அந்த நாட்டு அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு வருகை தந்துள்ளது.

அத்துடன் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜூம் இதன்பொருட்டு இன்று இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 15 பேர் அடங்கிய குழு இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளது.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, திலிப் வேதஆராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் இந்த சந்திப்பில் இணைந்து கொள்ளவுள்ளனர்.