போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை உட்பட அறுவர் கைது

280 0

1434748263arres5வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் கொகேன் மற்றும் கஷீஸ் எனும் போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் உட்பட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் வசம் இருந்து 5 கிராம் 710 மில்லிகிராம் கொகேன் மற்றும் 3 கிராம் கஷீஸ் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 224 சிகரெட்டுக்களும் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் களணி பகுதியைச் சேர்ந்தவர்கள் என வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று இவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.