ரத்னசிறி விக்ரமநாயகவின் இறுதிக் கிரியைகள் இன்று

460 0

ratnasiri-wickremanayakeமறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

ஹொரன பொது விளையாட்டரங்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்பொருட்டு ஹொரன பகுதியில் இன்று பிற்பகல் 02.30 தொடக்கம் 03.30 வரை விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் ஹொரன – இரத்தினபுரி பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படலாம் என்பதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.