கூரிய ஆயுதத்தால் வைத்தியர் மீது தாக்குதல்

373 0

917434817kolaiகொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் குறித்த வைத்தியர் நோயாளருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, அங்கு நுழைந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த வைத்தியர் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தாக்குதலை மேற்கொண்டவர் பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளார்.