10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகம்

240 0

dengu-720x480இலங்கையில் பத்து மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சுகாதார அமைச்சின் பணிப்பாளர் பாலித்த மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

காலி, கம்பஹ, கொழும்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரையில் ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமான வீட்டுச் சூழல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் டெங்கு நோய் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 48 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 பேர் மரணித்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.