உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 12க்கு முன் வெளிவரும்

427 0

examination-department1கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. எம். என். ஜே. புஸ்பகுமார இதனைத் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் பெறுபேறுகளை வெளியிடுவது தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டதாக இலங்கை ஆசியரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தாமதமடைவது குறித்து விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 605 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.