அரசாங்கத்தின் குறைப்பாடு என்ன? சொல்கிறது ஹெல உறுமய

254 0

nishantha-sri-warnasinghe-720x480அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்தை மாகாண சபைகள் நிராகரிக்கின்றமையானது அரசாங்கத்தின் அரசியல் நிர்வாக முறைமையின் குறைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர்களின் அனுமதியுடனும் அனைத்து அமைச்சர்களின் பங்களிப்புடனும் அபிவிருத்தி சிறப்பு சட்டமூலம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது.

எனினும், இரு கட்சிகளையும் சேர்ந்த மாகாண சபையினர் இதனை நிராகரித்துள்ளமையானது வருந்தத்தக்கது என நிசாந்த வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.