மாகாணங்கள் நிராகரிப்பினும் மத்திய அரசால் தீர்மானிக்க முடியும் – ஐ.தே.க

245 0

nalin-bandaraஅபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்திற்கு மாகாண சபைகள் ஆதரவு வழங்காதபட்சத்தில் குறித்த சட்டமூலம் தொடர்பில் தீர்மானம் எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டதிட்டங்களுடன் அபிவிருத்தியை துரிதப்படுத்த முடியாது.

எனவே அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த சட்டமூலத்தின் ஊடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுத்த முடியும்.

இதனால் நாட்டில் நிலவிவரும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.