விஜயகலாவின் கருத்து இனவாதத்தை தூண்டுகிறது – விமல்

247 0

vijayakala-maheswaranஇனவாதத்தை தூண்டும் வகையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கருத்து வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவொன்றுக்கு அமைய காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் நேற்று முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆதரவாக விஜயகலா மகேஷ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இதனை ஆதரிப்பதாகவே அமைகின்றது.

விஜயகலா மகேஷ்வரனின் இந்த கருத்தானது இனவாதத்தை தூண்டுவதாக அமைகின்றது.

இத்தகைய கருத்துகள் தற்போது நாட்டில் நிலவும் நல்லிணக்கத்தையும் இல்லாதொழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.