பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் – பத்மினி நாளிக்கா

353 0

3பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் பிரசுரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பத்மினி நாளிக்கா தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்காக நான்கு கோடியே பத்து இலட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டதாகவும்,இதில் நான்கு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் நூல் பிரசுரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் அடுத்த வருடத்திற்கு தேவையான சகல பாடப்புத்தகங்களும் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தற்சமயம் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார்.

பாடப்புத்தகங்களை கல்வி அமைச்சின் விற்பனை ஊக்குவிப்பு மத்திய நிலையத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பாடசாலைகளுக்கு தேவையான பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தரம் ஒன்று மாணவர்கள் மற்றும் வேறு பாடங்களை தெரிவு செய்யும் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கான

பாடப்புத்தகங்கள் முதலாம் தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.