பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

233 0

vaddukoddai-1-29-12-2016முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கனடா கிளையினரால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இறுதி யுத்தத்தில் கணவனை இழந்த விதவை குடும்பங்களின் 75 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் தேவிபுரத்திலுள்ள இனிய வாழ்வு இல்லத்தின ஊடாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த பாடசாலை உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக தெரிவு செய்யப்பட்ட 69 குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதியம், மற்றும் எதிர் காலத்திற்கான பாதை, எனும் அறக்கட்டளை நிதியத்தினாலும் 69 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.