டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

242 0

flyடெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 939 பேருக்கு எதிராக டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வழங்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 4242 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

டிசம்பர் மாத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பிரகாரம்,  ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 238 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 16 வீதமான இடங்கள் நுளம்பு பரவும் வண்ணம் இருந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, டெங்கு நுளம்புகள் அதிகளவில் காணப்படும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.