அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்- தலதா அத்துக்கோரல

366 0

thalatha-aththukorala-29-12-2016அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு அமைச்சர் தலதா அத்துக்கோரல இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்,’ நாம் நல்லாட்சியின் பொருட்டு அர்பணிக்கப்பட்ட அரசாங்கமாகும். எம்மிடம் அரசியல் வேறுப்பாடுகள் இல்லை.  எம்மிடம் குரோதம் , வைராக்கியம் இல்லை. இந்நாட்டின் வரலாற்றின் மனித படுகொலைகள் நிகழ்ந்தன ,சண்டை சச்சரவுகளில் ஈடுப்பட்டார்கள். இன்று இரு கட்சிகளும் ஒன்றினைந்து முதன் முறையாக அரசாங்கமொன்றை அமைத்துள்ளது. இந்நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் சிறப்பான முறையில் வாழ்வதற்கான வழிமுறையை அமைத்துக் கொடுப்பதே எங்களுடைய ஒரே எதிர்பார்ப்பாகும்.” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்