மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் நிலவும் வீட்டுப்பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஆண்டு முழுமையான தீர்வு காணப்படும்- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி

253 0

 

ameer-aly-29-12-2016மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் நிலவும் வீட்டுப்பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஆண்டு முழுமையான தீர்வுகாணப்படும் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் உள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம், கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகர் பிரவில் இந்த ஆண்டு, ஆயிரத்து 157 திட்டங்களுக்காக 124 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிலையில், அவற்றில் ஆயிரத்து 60 திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக 108 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.எஞ்சியுள்ள வேலைத்திட்டங்களையும் விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், மீள்குடியேற்ற பகுதி மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப்பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்றில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் 450 வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், பொருத்து வீடுகள்

தேவையானவர்களும் விண்ணப்பிக்கமுடியும் என பிரதியமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.அத்துடன் மீள்குடியேற்ற பிரதேச மக்களின் வீட்டுப்பிரச்சினையை அடுத்த ஆண்டு தீர்த்துவைக்கும் வகையில் மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தியுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முழுமையாக வீட்டுப்பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.