நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்ய நடவடிக்கை

335 0

women-harvest-tea-leaves-at-a-plantation-in-kondoli-in-assam-state-on-june-19-2009-afp_file-e1356604913303நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் திட்டத்திற்காக சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார். தேயிலை காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

தேயிலை காணிகளை இதுவரை பதிவு செய்யாதவர்கள் இருப்பார்களாயின், கிராம உத்தியோகத்தரிடம் விண்ணப்பப்படிவங்களை பெற்று, உடனடியாக பதிவு செய்துக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.