யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையின் தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் தேடல் இதழ் 2 சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டது

343 0

 

downloadயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையின் தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் தேடல் இதழ் 2 சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.

தேடல் இதழ் 2 சஞ்சிகை வெளியீடு தொல்லியல் ஆய்வு வட்டத்தின் தலைவர் பொ.வருண்ராஜ் தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற போது யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வெளியிட்டு வைத்தார்.

சஞ்சிகையின் முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் சாந்தினி அருளானந்தம் பெற்றுக்கொண்டார்.

முதற்பிரதி வழங்ககப்பட்டதைத் தொடர்ந்து சிறப்புப்பிரதிகளை பேராசிரியர் சண்முகதாஸ் உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் பெற்றுக்கொண்டனர்.

தேடல் சஞ்சிகை இதழ் இரண்டில் சிரேஸ்ட பேராசிரியர் க.கந்தசாமியின் தமிழரின் கல்விப் பாரம்பரியத்தில் ஆய்வும் ஆய்வுக்குரிய பிரச்சிரனைகளையும் இடையாளம் காணுதல், யாழ்ப்பாண இராசதானி காலத்தில் தோன்றிய ச.சரீனாவின் இளவாலை கூட்டத்தார் கோவில், ப.ராகினியின் அச்சுவேலியில் காணப்படும் ஐரோப்பிய கால தொல்லியல் எச்சங்கள், வே.ரஜீவனின் யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள ஐரோப்பிய கால வெளிச்ச வீடுகள், மயூரனின் யாழ்ப்பாண போர்த்துக்கேயர் ஆட்சியில் தோன்றிய கத்தோலிக்க தேவாலயங்கள், இ.நித்தியாவின் மட்டுவில் பிரதேசத்தில் பாவனையிலிருந்து அருகிவரும் பயன்பாட்டுச் சின்னங்கள் ஒரு ஆய்வு உட்பட 18 ஆய்வுக்கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.