வவுனியா திருநாவற்குளத்தில், ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்

276 0

jouranlist-28-12-2016-2சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் போத்தல்களை எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் தாக்குதல் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக சிலர் தனக்கு எதிராக அவதூறு பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் தன்னை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வந்ததன் காரணமாக அவர்களுக்கு எதிராக செயற்பட்டதன் விளைவாக தன்மீது தாக்குதல் நடாத்தும் நோக்கத்துடன், அல்லது தன்னை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இத்தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என்றும் குறித்த ஊடகவியலாளர் சந்தேகம் வெளியிட்டார்.

தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்ததுடன், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை விசாரணை செய்து எச்சரித்து விடுவித்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் மீது இந்த மாதத்தில் மாத்திரம் மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

jouranlist-28-12-2016-1 jouranlist-28-12-2016-3 jouranlist-28-12-2016-4 jouranlist-28-12-2016-5 jouranlist-28-12-2016-6 jouranlist-28-12-2016-2