என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்- டி.எம் சுவாமிநாதன்(காணொளி)

329 0

suvamiஎன்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

கடந்த செம்ரெம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு, இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது, நட்ட ஈட்டினை வழங்கி விட்டு   உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘வீட்டுத்திட்டம் என்னவென்றால்  உண்மையாக இப்பொழுது பல பிரச்சனைகள் இருக்கின்றது மண்  இல்லை வேலைகளைச்  செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை இவ்வாறு  பல  பிரச்சனைகள் இருக்கின்றன இதனால் நான் பிரதமருடன்  பேசி முன் அமைக்கப்பட்ட ஒரு தொகை   வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்வந்திருக்கின்றேன் அந்த வீட்டுத்திட்டத்தின்  மூலம் ஒரு வீட்டை  நான் சுன்னாகத்திலே  கட்டி இருக்கின்றேன்  இந்த வீட்டை  எத்தனையோ பேர்  சென்று பார்வையிட்டு இருக்கின்றனர் ஆனாலும்  இவற்றுக்கு  எதிர்ப்பை  காண்பதற்கு பலர் இருக்கின்றனர்  அதனைப்பற்றி  இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை எனினும்  இத்திட்டம்  முற்றுமுழுதாக மக்கள் நலம்  சார்ந்ததே ஆகவே  இத்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படும்.” எனவும்  தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து  நிகழ்வின்  முடிவில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் இருக்கிறதா  என ஊடகவியலாளர்களினால்  தொடுக்கப்பட்ட  கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல்  சென்றமை குறிப்பிடத்தக்கது