நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும்

265 0

89695314youthநாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்வி

ருப்பு வாக்கு தேர்தல் முறைமைக்கு பதிலாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிய முறையில் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக இவ்வாறு தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.ஒரு தொகுதிக்கு ஒரு கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரை மட்டுமே போட்டியிடச் செய்யும் தேர்தல் முறையொன்று அறிமுகம் செய்யப்படும்.

இதனால் விருப்பு வாக்கு முறையில் காணப்படும் குறைகளை நீக்க முடியும்.சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்துக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார்.எனினும் வேறு சில தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

அதே அடிப்படையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஆவன செய்ய சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்க்ப்பட உள்ளது. அதற்கு முன்னதாக 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.