தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று(28) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரச வாகனங்களை முறை கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காகவே இவர் வருகை தந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, இந்த மாதம் 04ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போது கண்டி தலதாமாளிகையில் சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்ததால் அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
எனவே, அவரை இன்றைய தினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

