எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை – எல்லை நிர்ணய ஆணைக்குழு

267 0

d08e7b42e7bf9eeb70c787ab5d23eb59_xlஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் தமிழ் மொழி பெயர்ப்பு மீள் பரிசீலணை செய்யப்படாமையால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்காக இன்னும் சில நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமது அறிக்கையை வழங்க தினம் ஒன்று ஒதிக்கித்தருமாறு, பிரதமரிடம், எல்லை நிர்ணய ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

இதன்படி, குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும், ஆணைக்குழு கலந்துரையாட வேண்டியது அவசியம் என, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொள்ளும்போது, ஏனைய கட்சி தலைவர்களும் உடனிருக்கும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில், பாராளுமன்றம் கூடும் தினமொன்றில் அதனை பிரதமரிடம் கையளிக்கும் வாய்ப்புள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது