அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் – விற்பனைப் பிரதிநிதிகள்

240 0

download-12017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் என்று, அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்ட இலாபச்சீட்டு ஒன்றின் விலையை 30 ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், நாட்டிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டுச் சந்தையை இல்லாதொழிக்கும் செயற்பாடாகும் என்று அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு அப்பிரதிநிகள் சங்கம் எடுத்துரைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் குருநாகல் மாவட்ட, அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் நலன்புரிச் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

அதிர்ஷ்ட இலாபச்சீட்டொன்றின் விலையை 10 ரூபாயினால் அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தைக் கைவிடுமாறு, அரசாங்கத்திடம் தாம் கேட்டுக்கொள்வதாகவும், அவ்வாறு இல்லாது அதிர்ஷ்ட இலாபச்சீட்டினை வேறு நபர்களைக் கொண்டு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.