கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி  நியமிக்கப்பட்டார்

272 0

eduminister1கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தனிப்பட்ட விஜயமாக வெளிநாடு ஒன்றிற்கு செல்வதால், கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பதில் முதலமைச்சராக, நியமிக்கப்பட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆளுநர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஒப்பமிட்டு அமைச்சர் சி.தண்டாயுதபாணி, பதில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.